பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு எழுதியோர் நகல் பெற அழைப்பு
பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு எழுதியோர் நகல் பெற அழைப்பு
பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு எழுதியோர் நகல் பெற அழைப்பு
ADDED : ஜூலை 27, 2011 01:16 AM
சிவகங்கை : ''பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வெழுதிய மாணவர்கள், விடைத்தாள் ஜெராக்ஸ், மறு கூட்டல் பெற விண்ணப்பிக்கலாம்,'' என, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் சிறப்பு துணை தேர்வு நடந்தது. இத்தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இம்மாணவர்களுக்கான மதிப்பெண் சான்று, ஜூலை 29 முதல் வழங்கப்படும். இதில்,தோல்வியுற்ற மாணவர்கள், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, ஜூலை 28 வரை அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்ப கட்டணத்தை அரசு தேர்வுத்துறை இயக்குனரகம், சென்னை6 என்ற முகவரிக்கு, சென்னையில் மாற்றத்தக்க வகையில்,'டிடி' எடுத்து, விண்ணப்பத்துடன் வழங்க வேண்டும்.'டிடி'யின் பின்னால் தேர்வரின் பெயர், பதிவெண், பாடத்தை குறிப்பிடவேண்டும்.
விடைத்தாள் ஜெராக்ஸ் நகல் பெற, மொழிப் பாடத்திற்கு தலா 550 ரூபாய், பிற பாடங்களின் நகல் பெற பாடத்திற்கு 275 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தவேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, மொழி பாடம், ஆங்கிலம் மற்றும் உயிரியல் பாடத்திற்கு 305; பிற பாடங்கள் ஒன்றுக்கு 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.