/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கூட்டுறவு பண்டக சாலை கணக்குகள் தனியாரிடம் விடப்பட்டதால் பல லட்சம் வீண்கூட்டுறவு பண்டக சாலை கணக்குகள் தனியாரிடம் விடப்பட்டதால் பல லட்சம் வீண்
கூட்டுறவு பண்டக சாலை கணக்குகள் தனியாரிடம் விடப்பட்டதால் பல லட்சம் வீண்
கூட்டுறவு பண்டக சாலை கணக்குகள் தனியாரிடம் விடப்பட்டதால் பல லட்சம் வீண்
கூட்டுறவு பண்டக சாலை கணக்குகள் தனியாரிடம் விடப்பட்டதால் பல லட்சம் வீண்
ADDED : ஜூலை 29, 2011 11:04 PM
நஷ்டத்தில் இயங்கும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கணக்குகளை சரிபார்க்கும் பொறுப்பு கடந்த ஆட்சியில் தனியாருக்கு விடப்பட்டது.
இதற்காக ஆண்டுக்கு 2 லட்ச ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் கூட்டுறவு நிறுவனங்கள் மேலும் தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.தமிழ்நாடு கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மாவட்ட அளவில் இயங்கி வருகின்றன. இந்த விற்பனை மையங்களில் தனியார், அரசு சார்ந்த நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பொது மக்களுக்கு போலியான பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக பொருட்களை கொள்முதல் செய்து, விற்பனை செய்வதால் பொதுமக்களும் இங்கு ஆர்வத்துடன் வாங்கி வந்தனர். இது தவிர கோயில்கள், அரசு சார்ந்த விடுதிகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் இங்கிருந்தே சப்ளை செய்யப்படுகிறது. இந்த மையங்களில் முறைகேடு நடைபெறாமல் இருக்க கடந்த தி.மு.க., அரசு இவற்றின் கணக்குகளை பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் கொடுத்தது. கணக்குகளை பராமரிக்க தனியார் நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள கூட்டுறவு பண்டகசாலையும் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்தை கட்டணமாக வழங்க வேண்டும். ஏற்கனவே அனைத்து பண்டகசாலைகளும் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் பராமரிப்பு பெயரில் பல லட்சம் வீணாகி வருவதாக கூட்டுறவு ஊழியர்களே புலம்புகின்றனர். கணக்குகளை அந்தந்த கூட்டுறவு பண்டகசாலை பணியாளர்கள் பராமரித்தது போல் மீண்டும் பராமரிக்க அரசு உத்தரவிடவேண்டும் என ஊழியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.இணைப்பதிவாளர் ஒருவர் கூறுகையில்,'' ஆரம்பத்தில் கணக்குகளை பணியாளர்களே பார்த்து வந்தனர். எந்தவித குழப்பமும் இல்லாமல் தான் இருந்தது. டந்த அரசு இவற்றை கண்காணிக்கும் பொறுப்பை தனியாருக்கு கொடுத்ததன் மூலம் மேலும் நஷ்டத்தில் இயங்க வழி வகுத்து விட்டது. தமிழகத்தில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், சென்னை (வடக்கு) உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கூட்டுறவு பண்டகசாலை தவிர மற்ற இடங்களில் உள்ளவை பராமரிக்க முடியாத அளவிற்கு நஷ்டத்தில் இயங்கி வருகின்றன,'' என்றார்.