/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வட்டார தடகள போட்டிதிருவேங்கடம் பள்ளி சாதனைவட்டார தடகள போட்டிதிருவேங்கடம் பள்ளி சாதனை
வட்டார தடகள போட்டிதிருவேங்கடம் பள்ளி சாதனை
வட்டார தடகள போட்டிதிருவேங்கடம் பள்ளி சாதனை
வட்டார தடகள போட்டிதிருவேங்கடம் பள்ளி சாதனை
ADDED : ஆக 26, 2011 01:32 AM
திருநெல்வேலி:வட்டார அளவிலான தடகள போட்டியில் திருவேங்கடம் டாக்டர் கெங்குசாமி நாயுடு மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
சங்கரன்கோவில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் கரிவலம்வந்தநல்லூர்
மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் தடகள போட்டியில்
டாக்டர் கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மேனகா ஜூனியர்
பிரிவில் 100மீ, 4*100மீ ரிலே ஓட்டத்தில் முதலிடமும், 400மீ ஓட்டத்தில்
மூன்றாமிடமும் பிடித்தார்.மேலும் இப்பள்ளி மாணவிகள் ரம்யா, நந்தினி, ரோஹினா
ஆகியோரும் சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தாளாளர்,
பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர், பள்ளி முதல்வர்,
நிர்வாக அதிகாரி, உடற்கல்வி ஆசிரியை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள்
பாராட்டினர்.