/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசி மேலச்சங்கரன் கோயிலில்1ம் தேதி ஆடித்தபசு கொடியேற்றம்தென்காசி மேலச்சங்கரன் கோயிலில்1ம் தேதி ஆடித்தபசு கொடியேற்றம்
தென்காசி மேலச்சங்கரன் கோயிலில்1ம் தேதி ஆடித்தபசு கொடியேற்றம்
தென்காசி மேலச்சங்கரன் கோயிலில்1ம் தேதி ஆடித்தபசு கொடியேற்றம்
தென்காசி மேலச்சங்கரன் கோயிலில்1ம் தேதி ஆடித்தபசு கொடியேற்றம்
ADDED : ஜூலை 30, 2011 02:15 AM
தென்காசி:தென்காசி மேலச்சங்கரன் கோயிலில் வரும் ஆக.1ம் தேதி ஆடித்தபசு
திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.தென்காசி காசிவிசுவநாதர் கோயிலை
சார்ந்த மேலச்சங்கரன் கோயில் என்று அழைக்கப்படும் சங்கரநாராயணசுவாமி கோமதி
அம்பாள் கோயிலில் ஆண்டு தோறும் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக நடப்பது
வழக்கம். இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா வரும் ஆக.1ம் தேதி துவங்குகிறது.
அன்று காலை 6.30 மணிக்குமேல் 7.30 மணிக்குள் கோயிலில் கொடியேற்றம்
நடக்கிறது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை
நடக்கிறது. காலை மற்றும் இரவில் பூங்கோயில் வாகனத்தில் அம்பாள் திருவுலா
காட்சி நடக்கிறது.
தொடர்ந்து வரும் 10ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் காலை, இரவில் பல்வேறு
வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி திருவுலா வருகிறார். சீர்பாதம் நடக்கிறது.
11ம் தேதி மாலையில் தெற்கு மாசி வீதியில் சுவாமி சங்கரநாராயணராக
அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் தபசு காட்சி, சுவாமி, அம்பாள் திருவீதி உலா
நடக்கிறது. இரவு காட்சியும் நடக்கிறது. 12ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் 10
மணிக்குள் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.தென்காசி கீழ
சங்கரன்கோயிலிலும் ஆடித்தபசு திருவிழா துவங்குகிறது. ஒவ்வொரு நாளும்
சிறப்பு வழிபாடு, சப்பர பவனி நடக்கிறது. 11ம் தேதி மாலையில் காசிவிசுவநாதர்
கோயில் முன்பு தபசு காட்சி நடக்கிறது.