/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மலைவாழ் குடியிருப்பில் வேளாண் பல்கலை மாணவிகள் ஆய்வுமலைவாழ் குடியிருப்பில் வேளாண் பல்கலை மாணவிகள் ஆய்வு
மலைவாழ் குடியிருப்பில் வேளாண் பல்கலை மாணவிகள் ஆய்வு
மலைவாழ் குடியிருப்பில் வேளாண் பல்கலை மாணவிகள் ஆய்வு
மலைவாழ் குடியிருப்பில் வேளாண் பல்கலை மாணவிகள் ஆய்வு
ADDED : ஜூலை 29, 2011 11:42 PM
உடுமலை : கோவை வேளாண் பல்கலைகழக நான்காம் ஆண்டு (வேளாண் வணிக மேலாண்மை) மாணவிகள் உடுமலை பகுதியில் களப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குழுவை சேர்ந்த 12 மாணவிகள் தளிஞ்சி மலைவாழ் குடியிருப்பில் இரண்டு நாட்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.தளிஞ்சி வயல் பகுதியில் நெல் சாகுபடி பணிகள் மற்றும் விற்பனை முறைகள் குறித்து ஆய்வு நடத்தினர். தளிஞ்சி அரசு பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தலைமையாசிரியர் மனோகரன் வரவேற்றார். ஏற்பாடுகளை நேசக்கரங்கள் அமைப்பினர் செய்திருந்தனர்.