ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு
ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு
ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு
UPDATED : ஜூன் 04, 2024 08:50 AM
ADDED : ஜூன் 04, 2024 05:35 AM

சென்னை: தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதி களுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், ஏப்., 19ல் தேர்தல் நடந்தது. பதிவான ஓட்டுகள் இன்று, 39 மையங்களில் எண்ணப்பட உள்ளன.
ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடங்களில், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். ஒரு மேஜையில், 500 தபால் ஓட்டுகள் எண்ணப்படும். தபால் ஓட்டு எண்ணிக்கை முடியாவிட்டாலும், காலை 8:30 மணிக்கு, மின்னணு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை துவக்கப்படும்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் குறைந்தது 14 மேஜைகளில் ஓட்டுகள் எண்ணப்படும். இது, ஒரு ரவுண்டாக கருதப்படும். ஒவ்வொரு ரவுண்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், அடுத்த ரவுண்டு துவங்கும். தபால் ஓட்டு எண்ணிக்கையை முடித்த பின், கடைசி ரவுண்டு ஓட்டுப்பதிவாக இயந்திர ஓட்டுகள் எண்ணப்படும்
ஓட்டு எண்ணப்படும் மையங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் கட்சி முகவர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்சி முகவர்கள் மற்றும் பணியாளர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
ஓட்டு எண்ணிக்கையின்போது, அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க, மாநிலம் முழுதும் முக்கிய இடங்களில், தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.