/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிவிப்புதேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிவிப்பு
தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிவிப்பு
தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிவிப்பு
தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிவிப்பு
ADDED : செப் 29, 2011 10:04 PM
திருப்பூர் : 'உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை; கட்சி பெயரையோ,
கொடியையோ பயன்படுத்தக் கூடாது,' என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்
அறிவித்துள்ளது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் வெளியிட்டுள்ள அறிக்கை:சட்டசபை,
பாராளுமன்ற தேர்தல்களில் முஸ்லிம் சமுதாயத்துக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை
கவனத்தில் கொண்டு, ஓர் அணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ஆதரிக்கிறது.
உள்ளாட்சி அமைப்பு என்பது உள்ளூர் நிர்வாகம் சம்பந்தப்பட்டது. இத்தேர்தலில்
முஸ்லிம் மக்களுக்கு என பொதுவான கோரிக்கைகளை வைக்க முடியாது என்பதால்,
உள்ளாட்சி தேர்தலில் யாரையும் ஆதரிப்பதில்லை என்ற நிலைப்பாடு, இந்த
உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்கிறது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்
உறுப்பினர்கள்,தாங்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு ஓட்டு அளிக்கலாம்.
எனவே, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கொடியையோ, பெயரையோ எந்த வேட்பாளர்களும்
பயன்படுத்த வேண்டாம். மாவட்ட கிளை நிர்வாகிகள், எந்த வேட்பாளர்களுக்கும்
ஆதரவாக பிரசாரம் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டாம், என்று
தெரிவித்துள்ளது.