/உள்ளூர் செய்திகள்/திருச்சி/பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை கடைமடை பாசன விவசாயிகளால் பரபரப்புபொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை கடைமடை பாசன விவசாயிகளால் பரபரப்பு
பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை கடைமடை பாசன விவசாயிகளால் பரபரப்பு
பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை கடைமடை பாசன விவசாயிகளால் பரபரப்பு
பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை கடைமடை பாசன விவசாயிகளால் பரபரப்பு
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை தாலுக்கா கடைமடை பாசன விவசாயிகள் குழுவினர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: மாவட்ட கலெக்டர், டி.ஆர்.ஓ., நடத்தும் கூட்டங்களில் கலந்து கொண்டும், நேரடியாகவும், பொதுப்பணித்துறையின் செயல்பாட்டை கண்டித்து விவசாயிகள் பல முறை மனு அளித்துள்ளனர். விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை எடுத்துக்கூறினாலும் பட்டுக்கோட்டை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. பட்டுக்கோட்டை தாலுக்காவில் உள்ள தம்பிக்கோட்டை வாய்க்கால், பாட்டுவனாச்சி மற்றும் தம்பிக்கோட்டை வடகாடு வாய்க்கால், கல்யாணஓடை வாய்க்கால், வெண்டாக்கோட்டை வாய்க்கால், ராஜாமடம் வாய்க்கால், நரசிங்கபுரம் வாய்க்கால்.
புதுக்கோட்டை உள்ளூர் செல்லிக்குறிச்சி ஏரி பாசன வாய்க்கால், நசுவினி ஆறு மங்கனங்காடு படுகை வாய்க்கால், மகாராஜபுரம் சித்தேரி அனைக்கட்டு வாய்க்கால், தொக்காலிக்காடு கமாராஜ் அணைக்கட்டு வாய்க்கால், அலிவலம் வாய்க்கால் வேதபுரி அனைக்கட்டு வாய்க்கால் உள்ளது. ஐம்பது கிராமங்களின் கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் தராமல் விவசாயத்தை சீரழித்து தங்களையும், தங்களின் கால்நடைகளையும் பட்டினி போட்டு கொல்வதுடன், நாட்டு மக்களுக்கு தேவையான நெல் உற்பத்தியையும் சீரழிக்கின்றனர்.யார் ஆட்சி செய்தாலும் நாங்கள் செயல்பட மாட்டோம், திருந்த மாட்டோம் என செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டிக்கிறோம். முறை வைக்காமல் தண்ணீர் வழங்க வேண்டும் எனக் கோரி, பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும், கண்டன ஆர்ப்பாட்டமும் செய்கிறோம்.
கல்லணை கால்வாய், காட்டாறு அணை, பாசன வாய்க்கால் போன்றவற்றை கடைமடைவரை கான்கிரீட் வாய்க்காலாகவும், அணை மற்றும் மதகுகளில் ஷட்டர்கள் இல்லாததையும், ஷட்டர் சேதாரத்தையும், சரிசெய்து நீர் விரயமாகி வருவதை உடனே சரி செய்ய வேண்டும். ஆற்றுப்பாசனம் இல்லாத காலங்களில் பொதுமக்களின் வாழ்வாதாரமாக ஏரி, குளங்களை தூர்வாரிடவும், அதற்கு வடிகால் வசதிகளை செய்திடவும் கடந்த பல ஆண்டாக முறையிட்டும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதனால் அவர்களின் அலுவலகங்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி கைதுசெய்தார்.