/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரசு சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் : தொழில்முனைவோருக்கு கலெக்டர் அறிவுரைஅரசு சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் : தொழில்முனைவோருக்கு கலெக்டர் அறிவுரை
அரசு சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் : தொழில்முனைவோருக்கு கலெக்டர் அறிவுரை
அரசு சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் : தொழில்முனைவோருக்கு கலெக்டர் அறிவுரை
அரசு சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் : தொழில்முனைவோருக்கு கலெக்டர் அறிவுரை
ADDED : செப் 01, 2011 05:25 AM
கரூர்: கரூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மான்யம் மற்றும் சலுகைகள் குறித்த தகவல் பரப்பு கூட்டம் நெசவு மற்றும் பனியன் உரிமையாளர்கள் சங்க கூட்ட அரங்கில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ÷ஷாபனா பேசியதாவது: தொழில்முனைவோர்கள் தங்களது திட்டத்தை குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் திட்டம் என பிரித்து கொண்டு செயல்பட வேண்டும்.
புதியதாக தொழில் தொடங்குபவர்கள், ஏற்கனவே குறிப்பில் தொழிலில் உள்ளவர்களோடு தொடர்பு ஏற்படுத்தி கொண்டு, நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும். புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கு அரசு 30 சதம் வரை மான்யம் தருகிறது. அதிகப்பட்சமாக ஒரு கோடி ரூபாய் மான்யம் கிடைக்கும். பெண்கள் மற்றும் திருநங்கைளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தொழில்முனைவோர் இங்குள்ள மூலப்பொருட்களை கொண்டு தொழில் தொடங்க வேண்டும். குடிநீர் மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய தொழில்கள் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி கடனை முறையாக செலுத்த வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு வழங்க முடியும். தொழில்முனைவோர்களுக்கு அரசு தரப்பில் இருந்து பயிற்சி, சலுகை மற்றும் கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. எனவே அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகளை தொழில்முனைவோர் பயன்படுத்தி கொண்டு தொழில் வளத்தை பெருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் கோவிந்தராஜன், ஜவுளி குழும துணை இயக்குநர் திலக் பிரசாத், ஐ.ஓ.பி., வங்கி நிதி மற்றும் கடன் ஆலோசனை அலுவலர் சந்தானம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக கிளை மேலாளர் பழனிசாமி, தொழில்கள் வளர்ச்சி நிறுவன புலனாய்வாளர் நாராயணா, பொருளாதார புலனாய்வு மேலாளர் பிரம்மநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.