/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மீண்டும் மாறுகிறது மாநகராட்சி வார்டுகள்மீண்டும் மாறுகிறது மாநகராட்சி வார்டுகள்
மீண்டும் மாறுகிறது மாநகராட்சி வார்டுகள்
மீண்டும் மாறுகிறது மாநகராட்சி வார்டுகள்
மீண்டும் மாறுகிறது மாநகராட்சி வார்டுகள்
ADDED : ஆக 22, 2011 11:25 PM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி எல்லையில் பிரிக்கப்பட்ட 24வது வார்டுகளின் எண்ணிக்கையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, அரசு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த திருப்பூர் மாநகராட்சியின் வார்டு விவரங்கள், கடந்த ஜூன் 28ம் தேதி வெளியிடப்பட்டது; அதற்கான அரசாணையும் வெளியானது. அதன்படி, வேலம்பாளையம் நகராட்சியில் ஆறு வார்டு, நல்லூர் நகராட்சியில் ஆறு வார்டு, எட்டு ஊராட்சிகளில் 24 வார்டுகள்; தற்போதைய மாநக ராட்சி எல்லையில் 24 வார்டுகள் என 60 வார்டு எல்லை விவரங்கள் வெளியிடப்பட்டன. எல்லை மறுசீரமைப்பு குறித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் கருத்து கேட்கப்பட்டது. வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகள் மற்றும் எட்டு ஊராட்சிகளில் வரும் 36 வார்டுகளில் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை. மாநகராட்சி எல்லைக்குள் தயாரித்த 24 வார்டு எல்லைகள் குறித்து, அனைத்து கட்சியினரும் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். இதுகுறித்து எல்லை மறு சீரமைப்பு வாரியத்துக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, நிர்வாக வசதிகாக மாநகராட்சியில் உள்ள வார்டு எல்லைகளை மீண்டும் மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, புதிய எல்லைகளுடன் 24 வார்டுகள் உத்தேசமாக பிரிக்கப்பட்டு, அரசு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.புதிதாக உத்தேசிக்கப்பட்ட எல்லை விவரம்: (அடைப்புக்குள் புதிய வார்டு எண்)வேலம்பாளையம் (1) நகராட்சியின் 1, 20, 21வது வார்டுகள்; (2) செட்டிபாளையம் ஊராட்சியின் 2வது வார்டு பகுதிகள்; (3) செட்டிபாளையத்தின் 1வது வார்டு பகுதிகள். (4) செட்டிபாளையத்தின் 3வது வார்டு பகுதிகள். (5) வேலம்பாளையம் நகராட்சியின் 2, 3, 4, 5வது வார்டுகள்; (6) வேலம்பாளையம் நக ராட்சியின் 6,7,8,9வது வார்டு பகுதிகள். செட்டிபாளையம் (7) ஊராட்சியின் 4வது வார்டு பகுதிகள்; (8) திருப்பூர் மாநகராட்சியின் 3,4 வார்டு பகுதிகள்; (9)மாநகராட்சியின் 5,8 வார்டு பகுதிகள். (10) மாநகராட்சியின் 1,2வது வார்டு பகுதிகள்; (11) வேலம்பாளையம் நகராட்சியின் 10,11, 12,13வது வார்டு பகுதிகள்; (12) மாநகராட்சியின் 21வது வார்டு பகுதிகள்;(13) மாநகராட்சியின் 22வது வார்டு பகுதிகள். வேலம்பாளையம் (14) நகராட்சியின் 14, 15, 16,17வது வார்டு பகுதிகள்; (15) வேலம்பாளையம் நகராட்சியின் 18,19வது வார்டு பகுதிகள்; (16)நெருப்பெரிச்சல் ஊராட்சியில் 4வதுவார்டு; (17)நெருப்பெரிச்சலின் 5வது வார்டு பகுதிகள்; (18) நெருப்பெரிச்சல் ஊராட்சியின் 1வது வார்டு பகுதிகள்; (19) நெருப்பெரிச்சலின் 2, 3வது வார்டு பகுதிகள்; (20) தொட்டிபாளையம் ஊராட்சியின் 1வது வார்டு பகுதி; (21) மண்ணரை ஊராட்சியின் 1, 2வது வார்டுகள்; (22)திருப்பூர் மாநகராட்சியின் 12வது வார்டு பகுதிகள்; (23) மாநகராட்சியின் 13,14வது வார்டு பகுதிகள்; (24) மாநகராட்சியின் 15,16,17வது வார்டு பகுதிகள். மாநகராட்சியின் 18,19,20வது வார்டு பகுதிகள்(25); (26) மாநகராட்சியின் 6,7,9வது வார்டு பகுதிகள்; (27)மாநகராட்சியின் 10, 11வது வார்டு பகுதிகள்; (28)தொட்டிபாளையம் ஊராட்சியின் 3வது வார்டு பகுதிகள்; (29)தொட்டிபாளையம் ஊராட்சியின் 4வது வார்டு பகுதிகள்; (30) தொட்டிபாளையத்தின் 2வது வார்டு பகுதிகள்.திருப்பூர் மாநகராட்சியின் 37,38வது வார்டு பகுதிகள் (31)வது வார்டாக பிரிக்கப்பட்டுள்ளன. (32) மாநகராட்சியின் 39,40வது வார்டு பகுதிகள்; (33)மண்ணரை ஊராட்சியின் 3வது வார்டு பகுதி; (34) நல்லூர் நகராட்சியின் 1,2,15வது வார்டு பகுதிகள்; (35) நல்லூரின் 3,4,5வது வார்டு பகுதிகள்; (36) முத்தணம்பாளையம் ஊராட்சியின் 3,4,5வது வார்டு பகுதிகள்;(37) முத்தணம்பாளையத்தின் 1,2வது வார்டு பகுதிகள். நல்லூர் நகராட்சியின் 6,7,12வது வார்டு பகுதிகள் (38); (39) நல்லூரின்13, 14வது வார்டு பகுதிகள்; (40) நல்லூரின் 10,11வது வார்டு பகுதிகள்; (41)நல்லூரின் 8, 9வது வார்டு பகுதிகள். திருப்பூர் மாநகராட்சியின் 35, 45, 49, 51வது வார்டு பகுதிகள், ஒருங்கிணைக்கப்பட்ட மாநகராட்சியின் 42வது வார்டு; (43) மாநகராட்சியின் 47,48வது வார்டு பகுதிகள்; (44)மாநகராட்சியின் 41,42வது வார்டு பகுதிகள்;(45) 36,43,44,46வது வார்டு பகுதிகள்; (46)25,27வது வார்டு பகுதிகள் ;(47) 23,24வது வார்டுகள்; (48) 26,28வது வார்டு பகுதிகள்; (49)31, 32,33வது வார்டு பகுதிகள்; (50)மாநக ராட்சியின் 34, 52வது வார்டு பகுதிகள். திருப்பூர் மாநகராட்சியின் 50வது வார்டு பகுதிகள், ஒருங்கிணைக்கப்பட்ட மாநகராட்சியின் 51வது வார்டு; (52)வீரபாண்டி ஊராட்சியின் 1வது வார்டு பகுதி; (53) வீரபாண்டியின் 2வது வார்டு பகுதிகள்; (54) வீரபாண்டியின் 3,4வது வார்டு பகுதிகள்; (55) முருகம்பாளையம் ஊராட்சியின் 4வது வார்டு பகுதிகள்; (56) திருப்பூர் மாநகராட்சியின் 29, 30வது வார்டு பகுதிகள். முருகம்பாளையம் ஊராட்சியின் 3வது வார்டு பகுதிகள் 57வது வார்டு; (58)முருகம்பாளையத்தின் 1, 2வது வார்டு பகுதிகள்; (59) ஆண்டிபாளையம் ஊராட்சியின் 1,3வதுவார்டு பகுதிகள்; (60) ஆண்டிபாளையத்தில் 2வது வார்டு பகுதிகள். 'உத்தேசமாக மீண்டும் எல்லைகளை மறுசீரமைப்பு செய்து, அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வார்டுகள் வரிசை எண்ணிக்கை அடிப்படையில், தலா 15 வார்டுகளுடன் மண்டல எல்லைகளும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் இதுகுறித்த அரசாணை வெளியாகும்,' என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


