/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பட்டாசு ஆலைகள் செயல்பாடு : அமைச்சர்கள் வலியுறுத்தல்சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பட்டாசு ஆலைகள் செயல்பாடு : அமைச்சர்கள் வலியுறுத்தல்
சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பட்டாசு ஆலைகள் செயல்பாடு : அமைச்சர்கள் வலியுறுத்தல்
சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பட்டாசு ஆலைகள் செயல்பாடு : அமைச்சர்கள் வலியுறுத்தல்
சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பட்டாசு ஆலைகள் செயல்பாடு : அமைச்சர்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 14, 2011 02:39 AM
விருதுநகர் : '' சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பட்டாசு ஆலைகள் செயல்பட வேண்டும் ,'' என, பட்டாசு ஆலைகள் விபத்து தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், உதயகுமார் கூறினர்.
சிவகாசி வெடி விபத்து குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் சட்டசபையில் விவாதம் நடந்தது.
இதை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவுபடி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன், தகவல் தொழில் நுட்ப அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக அரங்கில் நேற்று நடந்தது.கலெக்டர் பாலாஜி, நஜ்மல் கோதா எஸ்.பி., தீயணைப்பு உதவி கோட்ட அலுவலர் மணிகண்டன், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், எம்.எல்.ஏ., க்கள்., என பலரும் கலந்து கொண்டனர். ராஜேந்திர பாலாஜி எம்.எல்.ஏ.,பேசுகையில்,'' 600 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. 100 க்கும் மேற்பட்ட சிறிய பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. விருதுநகர் ஆஸ்பத்திரியில் தீக்காய பிரிவு அமைக்க வேண்டும்,'' என்றார்.
வைகை செல்வன் எம்.எல்.ஏ.,பேசுகையில்,'' மனித உயிர்கள் விலை மதிக்க முடியாத ஒன்று. பணம், பதவி, கல்வி எதை இழந்தாலும் அடைந்து விடலாம், உயிரை இழந்தால் பெற முடியாது. பட்டாசு ஆலையில் வேலை செய்வோருக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
கோபால்சாமி எம்.எல்.ஏ., பேசுகையில்,'' பட்டாசு ஆலையில் வேலை பார்ப்பவர்ககளுக்கு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும்,'' என்றார்.
பாண்டியராஜன் எம்.எல்.ஏ., பேசுகையில்,'' பலருக்கு எழுத படிக்க தெரியாது என்பதால் , இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
அமைச்சர் செல்லப்பாண்டியன் பேசுகையில்,'' திரி மருந்தை உள்ளே செலுத்துவதற்கு யாரும் வெண்கல ஊசி, தரை விரிப்பு ரப்பர் சீட் பயன்படுத்துவதில்லை.இதனால் விபத்து ஏற்படுகிறது.இதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்,'' என்றார்.
அமைச்சர் உதயகுமார் பேசுகையில்,'' அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப பட்டாசு ஆலைகள் செயல்பட வேண்டும்,'' என்றார்.