UPDATED : ஆக 15, 2011 07:02 AM
ADDED : ஆக 15, 2011 04:41 AM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் லாகூர் நகரில் வசித்து வந்த அமெரிக்கரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.பாகிஸ்தானின் லாகூர் நகரில் வசித்து வந்தவர் வாரன் வொயின்ஸ்டைன்(63) அமெரிக்காவை சேர்ந்த இவர் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இந்நகரில் வசித்து வருகிறார்.
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் இவருடைய வீட்டிற்குள் சென்றதாகவும் பின்னர் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் தகவல் அளித்தனர். அமெரிக்கர் கடத்தப்பட்டிருப்பதற்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப் பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் அமெரிக்க தூதரகமும் இது குறித்துகருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கரை கடத்திய நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி அப்துல் ரசாக் சீமா தெரிவித்துள்ளார்.