/உள்ளூர் செய்திகள்/தேனி/திருந்திய நெல் சாகுபடி குறித்த விழிப்புணர்வுதிருந்திய நெல் சாகுபடி குறித்த விழிப்புணர்வு
திருந்திய நெல் சாகுபடி குறித்த விழிப்புணர்வு
திருந்திய நெல் சாகுபடி குறித்த விழிப்புணர்வு
திருந்திய நெல் சாகுபடி குறித்த விழிப்புணர்வு
ADDED : ஆக 11, 2011 11:17 PM
தேனி : திருந்திய நெல் சாகுபடி குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 10 ஆயிரத்து 900 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறுவை பருவத்தில் மட்டும் இதுவரை 3,770 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக வீரபாண்டி, சீலையம்பட்டி, கருங்கட்டான்குளம், பாளையம், கம்பம் பகுதியில் 50 முதல் 100 ஏக்கர் பரப்பில் ஒரே இடத்தில் தொகுப்பு நிலத்தில் திருந்திய நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நெல் சாகுபடிக்கான தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் எளிதில் எடுத்துச் செல்ல முடியும். தொகுப்பு நிலத்தில் புதிய தொழில் நுட்பத்தில் நெல் சாகுபடி செய்வ தால் ஹெக்டேருக்கு 10 ஆயிரத்து 922 கிலோ நெல் சாகுபடி செய்யலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.