Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்த அறிவுரை

சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்த அறிவுரை

சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்த அறிவுரை

சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்த அறிவுரை

ADDED : ஆக 09, 2011 01:20 AM


Google News

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் தோட்டக்கலை திட்டங்கள் குறித்து துணை இயக்குனர் சந்திரசேகரன் நடத்திய ஆய்வில், விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தை முழுமையாக பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.

வத்தலக்குண்டு பகுதிகளில் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசியவேளாண்அபிவித்தி மற்றும் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டங்கள் மூலம் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. உச்சப்பட்டி சுரேஷ் வயலில் மா நடவில் சொட்டுநீர்பாசனம், மீனாட்சிபுரம் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள நெல்லி கன்றுகளை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விவசாயிகளிடம் சொட்டுநீர் பாசனத்தை முழுமையாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. சாந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணை, எழுவணம்பட்டியில் உள்ள துல்லிய பண்ணை நிலங்கள், திசு வாழை, தக்காளி சாகுபடியில் சொட்டு நீர் பாசனம் முறைகளை தோட்டக்கலைத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நீர்வடிப்பகுதி துணை இயக்குனர் இளங்கோ, உதவி இயக்குனர்கள் சங்கர், பழனிச்சாமி, சின்னராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us