/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல்லில் புதிய பஸ் ஸ்டாண்ட்அரசு ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்நாமக்கல்லில் புதிய பஸ் ஸ்டாண்ட்அரசு ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்
நாமக்கல்லில் புதிய பஸ் ஸ்டாண்ட்அரசு ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்
நாமக்கல்லில் புதிய பஸ் ஸ்டாண்ட்அரசு ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்
நாமக்கல்லில் புதிய பஸ் ஸ்டாண்ட்அரசு ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்
ADDED : செப் 19, 2011 12:59 AM
நாமக்கல்: 'நாமக்கல்லில், நவீன வசதியுடன் கூடிய புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க
வேண்டும்' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.நாமக்கல்லில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாமக்கல்,
10வது வட்டக்கிளை மாநாடு நடந்தது. தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். சங்க
கடந்த கால நடவடிக்கை குறித்து, செயலாளர் சுவாமிநாதன் விளக்கி கூறினார்.
பொருளாளர் அன்புதுரை வரவு, செலவு அறிக்கை அளித்தார்.சங்க மாநில செயலாளர்
குப்புசாமி, மாவட்ட தலைவர் நடேசன், சாலைப் பணியாளர் சங்க நிர்வாகி
பார்த்திபன் ஆகியோர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மான விவரம்:
நாமக்கல்லில், நவீன வசதி கொண்ட புதிய பஸ் ஸ்டாண்ட் உருவாக்க வேண்டும்.
பள்ளி, அலுவலக நேரங்களில், நாமக்கல் நகரினுள் நெரிசல் அதிகமாக இருப்பதால்,
சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துக்கு அங்கீகாரம்
வழங்க வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களை அழைத்துப் பேசி, ஏழாவது
ஊதிய மாற்றத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். சாலைப் பணியாளர்களின்
பணி நீக்க காலமான, 41 மாதத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, புதிய வட்டக்கிளை நிர்வாகிகள்
தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, புதிய தலைவராக இளவேந்தன், துணைத்
தலைவர்களாக தியாகராஜன், செயலராக சுவாமிநாதன், இணைச் செயலாளர்களாக
சக்கரவர்ததி, பார்த்திபன், பொருளாளராக அன்புதுரை ஆகியோர் தேர்வு
செய்யப்பட்டனர்.சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.