/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கூட்டுறவு சங்கத்துக்கு பருத்தி வரத்து குறைவுகூட்டுறவு சங்கத்துக்கு பருத்தி வரத்து குறைவு
கூட்டுறவு சங்கத்துக்கு பருத்தி வரத்து குறைவு
கூட்டுறவு சங்கத்துக்கு பருத்தி வரத்து குறைவு
கூட்டுறவு சங்கத்துக்கு பருத்தி வரத்து குறைவு
ADDED : ஜூலை 14, 2011 09:43 PM
அவிநாசி : அவிநாசியில் நடந்த பருத்தி ஏலத்துக்கு 2,400 மூட்டைகள் வரத்தாக
இருந்தது.
இது, கடந்த வாரத்தை விட குறைவு.அவிநாசி வேளாண் உற்பத்தியாளர்
கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்துக்கு, இந்த வாரம் 2,400
மூட்டை வரத்தாக இருந்தது. இது, கடந்த வாரத்தை காட்டிலும் 450 மூட்டை
குறைவு. வரத்து குறைந்துள்ள நிலையில், ஆர்.சி.எச்., பென்னி, சுரபி ஆகிய
ரகங்களின் விலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. இந்த வார ஏலத்தில் அனைத்து ரக
பருத்தி விலை விவரம் (குவிண்டாலுக்கு) வருமாறு: எல்.ஆர்.ஏ., ரூ.3,400
முதல் 3,700 வரை, ஆர்.சி.எச்., பென்னி மற்றும் சுரபி 3,500 முதல் 4,235
வரை, டி.சி.எச்., 3,800 முதல் 4,260 வரை மற்றும் மட்டம் 2,100.சங்க தனி
அலுவலர் பழனிசாமி கூறுகையில், ''கடந்த வாரத்தை விட, வரத்து சற்று
குறைந்துள்ளது. இரு வாரங்களாக பென்னி, சுரபி ஆகிய புது ரகங்கள் வரத்தாக
உள்ளன. இந்த வார ஏலத்தில் ரூ.31 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது,''
என்றார்.


