/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/"சரக்கு' கிடைக்காமல் "குடி'மகன்கள் அவதி"சரக்கு' கிடைக்காமல் "குடி'மகன்கள் அவதி
"சரக்கு' கிடைக்காமல் "குடி'மகன்கள் அவதி
"சரக்கு' கிடைக்காமல் "குடி'மகன்கள் அவதி
"சரக்கு' கிடைக்காமல் "குடி'மகன்கள் அவதி
ADDED : ஜூலை 14, 2011 09:41 PM
திருப்பூர் : திருப்பூரில், குறிப்பிட்ட முன்னணி கம்பெனி மதுபான வகைகள்
கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது; 'ஆப்' பீர் கிடைக்காமல்,
'குடி'மகன்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
'டாஸ்மாக்' மதுபான விற்பனையில்,
திருப்பூர் முன்னிலையில் உள்ளது. மாவட்ட அளவில், மாதம் 70 முதல் 75 கோடி
ரூபாய் வரை மதுபானங்கள் விற்பனை நடந்து வருகிறது; விசேஷ தினங்களில், சரக்கு
விற்பனை பல மடங்கு எகிறுகிறது. சில நாட்களுக்கு முன் மதுபானங்களின் விலை
உயர்த்தப்பட்டது. குவாட்டர் ஐந்து ரூபாய்; 'ஆப்' 10 முதல் 15 ரூபாய்;
'புல்' 20 ரூபாய் வரை விலை அதிகரித்தது; அனைத்து பீர் வகைகளும் ஐந்து
ரூபாய் உயர்ந்துள்ளது. ஏற்கனவே, குறிப்பிட்ட விலையுடன் ஐந்து முதல் 10
ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பது வழக்கம். தற்போது, அரசு தரப்பிலேயே
விலை உயர்த்தப்பட்டுள்ளதால் 'குடி'மகன்கள் புலம்பி தீர்க்கின்றனர்.
அதேநேரத்தில், குறிப்பிட்ட சில 'பிராண்டட்' முன்னணி மதுபான ரகங்களுக்கு
தட்டுப்பாடு நிலவுகிறது. எம்.சி., பிராந்தி, வி.எஸ்.ஓ.பி., ஹனிபீ, ரமணா
ஓட்கா, நெப்போலியன், ஜானக்ஷா, கார்டினல் உள்ளிட்ட மதுபான ரகங்கள்
கிடைக்காமல், 'குடி'மகன்கள் 'டென்ஷன்' ஆகின்றனர். விரும்பிய சரக்கை
'ருசி'க்க முடியாமல் திண்டாடுகின்றனர். 'ஆப்' பீர் கிடைக்காமல் பலரும்
'அப்செட்' ஆகின்றனர். விலை உயர்த்திய சரக்குகளுக்கு, புதிய லேபிள் ஒட்டி,
சப்ளை செய்ய சில நாட்களாகும் என்று, சரக்குகள் பற்றாக்குறைக்கு மதுக்கடை
மேற்பார்வையாளர்கள் காரணம் கூறி வருகின்றனர்.


