/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்களுக்கு டில்லியில் பயிற்சிபுதுச்சேரி எம்.எல்.ஏ.,க்களுக்கு டில்லியில் பயிற்சி
புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்களுக்கு டில்லியில் பயிற்சி
புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்களுக்கு டில்லியில் பயிற்சி
புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்களுக்கு டில்லியில் பயிற்சி
ADDED : ஆக 22, 2011 11:33 PM
புதுச்சேரி: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், பயிற்சி முகாமில் பங்கேற்க டில்லி செல்கின்றனர்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு, புத்தாக்கப் பயிற்சிக்கு பார்லிமென்ட் செயலகம் ஏற்பாடு செய்துள்ளது. டில்லியில் உள்ள பார்லிமென்ட் வளாகத்தில், புத்தாக்கப் பயிற்சி, வரும் 5, 6 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்க, எம்.எல்.ஏ.,க்கள் வரும் 4ம் தேதி மாலை புதுச்சேரியில் இருந்து டில்லிக்கு புறப்படுகின்றனர். பயிற்சி முடிந்து, 8ம் தேதியன்று புதுச்சேரி திரும்புகின்றனர். புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கி உள்ளது. இருந்தபோதும், வரும் செப்டம்பர் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை, சட்டசபையில் அமர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


