/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சிவகாசியில் மாநில தடகள போட்டி : காஞ்சிபுரத்துக்கு சாம்பியன் பட்டம்சிவகாசியில் மாநில தடகள போட்டி : காஞ்சிபுரத்துக்கு சாம்பியன் பட்டம்
சிவகாசியில் மாநில தடகள போட்டி : காஞ்சிபுரத்துக்கு சாம்பியன் பட்டம்
சிவகாசியில் மாநில தடகள போட்டி : காஞ்சிபுரத்துக்கு சாம்பியன் பட்டம்
சிவகாசியில் மாநில தடகள போட்டி : காஞ்சிபுரத்துக்கு சாம்பியன் பட்டம்
சிவகாசி : சிவகாசியில் நடந்த மாநில தடகள போட்டியில், காஞ்சிபுரம் மாவட்டம் சாம்பியன் பட்டம் பெற்றது.
18வயது ஆண்கள் பிரிவில் காஞ்சிபுரம் முதலிடம், கோவை 2வது இடம் பெற்றன. பெண்கள் பிரிவில் காஞ்சிபுரம் முதலிடம், சென்னை 2வது இடம் பெற்றன. 20வயது பிரிவில் காஞ்சிபுரம் முதலிடம், சென்னை 2வது இடம் பெற்றன. பெண்கள் பிரிவில் காஞ்சிபுரம் முதலிடம், ஈரோடு 2வது இடம் பெற்றன.இதில் 519 புள்ளிகள் பெற்ற காஞ்சிபுரம் மாவட்டம் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. 318 புள்ளிகள் பெற்ற சென்னை 2வது இடத்தை பெற்றது. பரிசளிப்பு விழா மாநில தகவல் ஆணையர் பெருமாள் சாமி தலைமையில் நடந்தது. விருதுநகர் மாவட்ட தடகள தலைவர் ஜான்நிக்கல்சன் வரவேற்றார். மாணிக்கம் தாகூர் எம்.பி., பரிசு வழங்கினார். மாநில தடகள தலைவர் வால்டர் தேவராம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சென்னை மண்டல முதன்மை மேலாளர் துரைசிங், மாநில தடகள பொருளாளர் ஈஸ்வரராவ், இணைச்செயலாளர் லதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். போட்டி நடுவர்களாக விருதுநகர் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி உடற்கல்வி துறை மாணவர்கள் பணியாற்றினர்.
சாதனையை முறியடித்த வீரர்கள் : 14வயது பெண்கள் பிரிவு உயரம் தாண்டுதலில் ஈரோடு ஸ்ரீவித்யா 1.46மீ.,தூரம் உயரம் தாண்டி , 2009ம் ஆண்டு சாதனையான 1.45 மீ., உயரம் தாண்டுதலை முறியடித்தார். 16வயது ஆண்கள் பிரிவில் 3000 மீ., ஓட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட வீரர் ராஜாங்கம் 9.32.7 வினாடியில் கடந்து,2009ல் 9.33.3 வினாடி சாதனையை முறியடித்தார். 20வயது ஆண்கள் பிரிவு கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் காஞ்சிபுரம் வீரர் பெரியசாமி 4.30 மீ., உயரம் தாண்டி, 2009ல் 4.30 மீ., உயரம் தாண்டியதை சமன் செய்தார்.