Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மந்த்ராலயம் மடத்திற்குஎடியூரப்பா ரூ.5 கோடி நிதி

மந்த்ராலயம் மடத்திற்குஎடியூரப்பா ரூ.5 கோடி நிதி

மந்த்ராலயம் மடத்திற்குஎடியூரப்பா ரூ.5 கோடி நிதி

மந்த்ராலயம் மடத்திற்குஎடியூரப்பா ரூ.5 கோடி நிதி

UPDATED : ஜூலை 26, 2011 07:09 PMADDED : ஜூலை 26, 2011 06:42 PM


Google News

நகரி: மந்த்ராலயம் ராகவேந்திர சுவாமி மடத்திற்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் பக்தர்கள், மந்த்ராலயத்தில் தங்குவதற்கு வசதிக் குறைபாடு உள்ளது.

அவர்களின் உபயோகத்திற்காக வசதி ஏற்படுத்தித் தரும்படி, இரண்டு மாதங்களுக்கு முன், மந்த்ராலயம் ராகவேந்திர சுவாமி தரிசனத்திற்கு வந்த எடியூரப்பாவிடம், கோவில் அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இங்கு பக்தர்களுக்காக, 100 தங்கும் அறைகளைக் கட்ட ஏற்பாடு செய்ய, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறேன் என எடியூரப்பா, அதிகாரிகளிடம் உறுதி அளித்தார்.அந்த 5 கோடி ரூபாய் நிதி உதவிக்கான தகவலை, நேற்று முன்தினம் மடத்தின் அதிகாரிகளுக்கு, அவர் பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us