/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சங்கராபுரம் ஒன்றிய குழுவின் சிறப்பு கூட்டம் திடீர் ஒத்திவைப்புசங்கராபுரம் ஒன்றிய குழுவின் சிறப்பு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு
சங்கராபுரம் ஒன்றிய குழுவின் சிறப்பு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு
சங்கராபுரம் ஒன்றிய குழுவின் சிறப்பு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு
சங்கராபுரம் ஒன்றிய குழுவின் சிறப்பு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு
ADDED : ஆக 03, 2011 10:18 PM
சங்கராபுரம் : சங்கராபுரம் ஒன்றிய குழு சிறப்பு கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக சந்திரசேகர் இருந்து வருகிறார். நிர்வாகத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து அரசிடமிருந்து வரப்பெற்ற கடிதத்தின் அடிப்படையில் சங்கராபுரம் ஒன்றிய குழு சிறப்பு கூட்டம் நேற்று காலை கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., உமாபதி தலைமையில் கூட்டப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் சந்திரசேகர், பி.டி.ஓ.,க்கள் சம்பத்குமார், மணவாளன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியதும், பிரச்னை தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சேர்மன் சந்திரசேகர் தடை உத்தரவு பெற்றுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் கூட்டத்தை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக ஆர்.டி.ஓ., உமாபதி தெரிவித்தார். முன்னதாக திருக்கோவிலூர் டி.எஸ்.பி., லோகநாதன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.