ADDED : செப் 10, 2011 02:05 AM
உடுமலை : உடுமலை பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர் சங்க
அறக்கட்டளை சார்பில், பள்ளியின் பொன்விழா, முன்னாள், இன்னாள்
ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என
முப்பெரும் விழா நடந்தது.
முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை செயலாளர்
ஆறுமுகம் வரவேற்றார். மூத்த உறுப்பினர் சுப்ரமணியம் தலைமை வகித்தார்.
பி.டி.ஏ., தலைவர் நாச்சிமுத்து, தலைமையாசிரியர் சுப்ரமணியம் உட்பட பலர்
பேசினர். தொடர்ந்து மாலையில் நடந்த விழாவில், அறக்கட்டளை இணைச் செயலாளர்
மணி வரவேற்றார். தலைவர் சேசாச்சலம் தலைமை வகித்தார். பொள்ளாச்சி எம்.பி.,
சுகுமார், பல்லடம் முன்னாள் எம்.எல்.ஏ., துரைமுருகன் உட்பட பலர்
பங்கேற்று பேசினர். முன்னாள், இன்னாள் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,
அலுவலகப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு
பொதுத்தேர்வில், கடந்தாண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டன. வெங்கடாச்சலம் நன்றி கூறினார்.