Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ராஜா தேசிங்கு நினைவிடத்தை சுற்றுலா தலமாக அறிவித்திட வேண்டும் : எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

ராஜா தேசிங்கு நினைவிடத்தை சுற்றுலா தலமாக அறிவித்திட வேண்டும் : எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

ராஜா தேசிங்கு நினைவிடத்தை சுற்றுலா தலமாக அறிவித்திட வேண்டும் : எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

ராஜா தேசிங்கு நினைவிடத்தை சுற்றுலா தலமாக அறிவித்திட வேண்டும் : எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

ADDED : ஆக 23, 2011 11:47 PM


Google News
செஞ்சி : ராஜா தேசிங்கு நினைவிடத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டுமென எம்.எல்.ஏ., கணேஷ் குமார் சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 19ம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தில் செஞ்சி தொகுதி எம்.எல். ஏ., கணேஷ்குமார் பேசியதாவது: நந்தன் கால்வாய் திட்டத்தின் மூலம் வெட்டப்பட்ட கால்வாய் மக்களுக்கு பயன்படாமல் கிடக் கிறது. இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து சாத்தனூரில் இருந்து உபரி நீரை கொண்டுவர ஆவன செய்ய வேண்டும். மழைக்காலத்தில் செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குளம் போல் தண்ணீர் தேங்குகிறது. இத னால் மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், அங்கு தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். மாவீரன் ராஜாதேசிங்கின் நினைவிடத்தை சீரமைக்க கடந்த 2001-2006 ஆட்சியில் நிதி ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த பணிகளும் நடக்க வில்லை. ராஜாதேசிங்கின் நினைவிடத்தை சுற்றுலா தலமாக மாற்ற ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். வளத்தி ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் சரியாக கிடைக்க வில்லை. நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகமாக இருப்பதால், தனியார் வாகனம் மூலம் குடிநீர் கொண்டு வந்து குடம் ஒன்று 2 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இங்கு நிரந்தர நீர் ஆதாரத்தை ஏற்படுத்தி தரமான குடிநீர் வழங்க வேண்டும். இவ்வாறு எம்.எல்.ஏ., கணேஷ்குமார் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us