/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தேசிய திறனறி தேர்வு பயிற்சி: முதல்வர் ரங்கசாமி துவக்கம்தேசிய திறனறி தேர்வு பயிற்சி: முதல்வர் ரங்கசாமி துவக்கம்
தேசிய திறனறி தேர்வு பயிற்சி: முதல்வர் ரங்கசாமி துவக்கம்
தேசிய திறனறி தேர்வு பயிற்சி: முதல்வர் ரங்கசாமி துவக்கம்
தேசிய திறனறி தேர்வு பயிற்சி: முதல்வர் ரங்கசாமி துவக்கம்
ADDED : செப் 20, 2011 01:43 AM
புதுச்சேரி : தேசிய திறனறி தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.மத்திய அரசு சார்பில் மாநில அளவில் தேசிய திறனறி தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இம்மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கு வெற்றி, ஜே.வி.ஆர். பிம் ஏற்பாடு செய்துள்ளன. இதன் துவக்க விழா கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது. வெற்றி கல்வி நிறுவன நிறுவனர் பேராசிரியர் குணசேகரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் அரசு கொறடா நேரு, புதுச்சேரி நகராட்சி முன்னாள் துணை சேர்மன் ஜான்குமார், மேலாண் இயக்குனர் சாந்தி குணசேகரன், வெற்றி வெங்கடேஸ்வரா நிறுவன இயக்குனர்கள் ராதா பூபாலன், அன்பரசன் ராதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.பயிற்சி பெற உள்ள மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி நுழைவு சீட்டு வழங்கினார். டீன் ராமச்சந்திரன் நாயர் நன்றி கூறினார்.


