ADDED : ஜூலை 24, 2011 09:20 PM
முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் அரசு பாலிடெக்னிக், சித்த மருத்துவ கல்லூரிகளை அமைக்க வேண்டும் என ஐக்கிய முஸ்லிம் ஜமாத்தினர், முருகன் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஜமாத் தலைவர்உமர் ஜாபர் ஆலீம், செய்தி தொடர்பாளர் முகம்மது சுல்தான் அலாவுதீன், நிர்வாக உறுப்பினர்கள் அயூப்கான், ஹபிபுல்லா, ஹாமீத்கான், ம.ம.க., நகர செயலாளர் முகம்மது இக்பால், மாவட்ட மாணவரணி செயலாளர் செய்யதுமீரா, உட்பட பலர் உடனிருந்தனர்.