மீனவர் உடலை மீட்டுத்தர கெஞ்சும் குடும்பத்தினர்
மீனவர் உடலை மீட்டுத்தர கெஞ்சும் குடும்பத்தினர்
மீனவர் உடலை மீட்டுத்தர கெஞ்சும் குடும்பத்தினர்
ADDED : ஆக 24, 2011 12:29 AM
மண்டபம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வலையர் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம், 27.
இவர் ஜஸ்டின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆக., 20 ல் மீன்பிடிக்கச்சென்று, 21ம் தேதி அரிச்சல்முனைப்பகுதியில் மீன்பிடித்து விட்டு திரும்பும்போது, நிலைதடுமாறி கடலில் விழுந்தார். இரண்டு நாட்களாகியும் முருகானந்தம் உடல் கிடைக்கவில்லை. மீனவர்கள் தொடர்ந்து கடலில் தேடி வருகின்றனர். மண்டபம் மீன்துறை, இந்திய கடலோர காவல்படை, இந்தியகடற்படைக்கு தகவல் கொடுத்து உடலை மீட்டு தருமாறு கோரியுள்ளனர். இரண்டு நாட்களாகியும் இந்திய கடலோர காவல்படையினர் உட்பட யாரும் தேடுதல் பணியில் ஈடுபடாததால், மீனவர் முருகானந்தத்தின் தந்தை சீனி, சகோதாரர் ரவி மற்றும் குடும்பத்தினர், மிகுந்த கவலையுடன் 'எப்படியாவது உடலை மீட்டு தரும்படி' கெஞ்சி வருகின்றனர்.