Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தேர்தல் விதிமுறை மீறல் : 110 பேர் மீது நடவடிக்கை

தேர்தல் விதிமுறை மீறல் : 110 பேர் மீது நடவடிக்கை

தேர்தல் விதிமுறை மீறல் : 110 பேர் மீது நடவடிக்கை

தேர்தல் விதிமுறை மீறல் : 110 பேர் மீது நடவடிக்கை

ADDED : ஜூலை 21, 2011 04:40 PM


Google News
Latest Tamil News

சிவகங்கை: தேர்தல் விதிமுறைகளை மீறிய இயக்குனர் உள்பட 110 பேர் மீது தேர்தல் கமிஷன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களை வைத்து 2011 சட்டசபை தேர்தல் சுமூகமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் தேர்தல் விதிமுறைகளை அரசு ஊழியர்களே மீறியதாக பல்வேறு கட்சியினர் தேர்தல கமிஷனிடம் புகார் செய்தனர்.



அதில், மத்திய அமைச்சர்கள், முன்னாள் மாநில அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்களை தேர்தல் பணியின் போது வரவேற்றது, அரசியல் கட்சியினருக்கு ஆதரவாக பிரச்சாரம், கட்சியினர் ஓட்டு கேட்டு செல்லும் இடங்களில் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது,தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகும் அரசு அலுவலகங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் படங்களை அகற்றாமல் வைத்திருந்தது, அரசியல் கட்சியினருக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தது, தேர்தல் அடையாள அட்டையை நேரடியாக வாக்காளர்களிடம் வழங்காமல் கவுன்சிலர்கள்,அரசியல் கட்சியினரிடம் மொத்தமாக வழங்கியது,ஓட்டு பதிவின் போது இயந்திரத்தில் உள்ள குளோசர் பட்டனை தேர்தல் முடிந்த பிறகு 'குளோஸ்' செய்யாமல் இருந்தது உள்ளிட்ட 17 வகையான குற்றச்சாட்டிற்கு ஆளானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.



இது போன்ற செயல்களில் ஈடுபட்ட, சென்னை நோய் தடுப்பு துறை இயக்குனர் தியாகராஜன், கரூர் சுகாதார துறை துணை இயக்குனர் சம்பத்குமார், திருவாடனை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் தவசிமுத்து, நான்குநேரி தலைமை ஆசிரியர் சரஸ்வதி, சிவகங்கை சத்துணவு அமைப்பாளர் கண்ணகி உள்பட 110 பேர் மீது நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளது. இதில் 30 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்ய உத்தரவும், மற்றவர்கள் மீது 17 ஏ ( பதவி உயர்வு, பணபலன்களை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது), 17 பி ( பணி நீக்கம் செய்ய பரிந்துரை செய்வது) பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us