நிர்வாகச் சீர்கேட்டை மறைக்க முதல்வர் முயற்சி: அண்ணாமலை குற்றச்சாட்டு
நிர்வாகச் சீர்கேட்டை மறைக்க முதல்வர் முயற்சி: அண்ணாமலை குற்றச்சாட்டு
நிர்வாகச் சீர்கேட்டை மறைக்க முதல்வர் முயற்சி: அண்ணாமலை குற்றச்சாட்டு

கடிதம்
தி.மு.க., தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் கூறியதாவது: வட மாநிலங்களில் டீ, பானி பூரி வாங்கவும், கழிப்பறை பயன்படுத்தவும் ஹிந்தியை கற்றுக் கொள்வது அவசியம் என பா.ஜ.,வினர் சொல்கின்றனர். செயற்கை நுண்ணறிவு காலத்தில், பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை திணிப்பது தேவையற்றது. நவீன மொழிபெயர்ப்பு கருவிகள், மொழிப்பிரச்னை என்ற தடையை அகற்றிவிட்டன. கூடுதல் மொழி என்ற சுமையை மாணவர்கள் மீது ஏற்றக்கூடாது. அவர்கள் தாய்மொழியில் புலமை பெறவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற ஆங்கிலம் கட்டாயம். விருப்பப்பட்டால் வேறு எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.
பதில்
இதற்கு பதிலடி கொடுத்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இல்லாத ஹிந்தித் திணிப்பு எனக்கூறி, தமிழகத்தில் நிலவும் நிர்வாக சீர்கேட்டை மறைக்க தான் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பெயிண்ட் டப்பாவை ஏந்திய சிலரைத் தவிர வேறு யாருக்கும் பிடிக்கவில்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் இன்னும் உணரவில்லை. தனது கட்சியின் பொதுச்செயலாளர் பேச்சை ஸ்டாலின் தவற விட்டுவிட்டது போல் தெரிகிறது. அவர் தான் ஹிந்தியை முன்னிறுத்துகிறார். தேசிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையைத் தான் வலியுறுத்துகிறது. இதன்படி எந்த இந்திய மொழியையும் மூன்றாவது மொழியாக படிக்கலாம்.