மும்பை குண்டுவெடிப்பு மூர்க்கத்தனமானது : பான் கீ மூன், ஒபாமா கண்டனம்
மும்பை குண்டுவெடிப்பு மூர்க்கத்தனமானது : பான் கீ மூன், ஒபாமா கண்டனம்
மும்பை குண்டுவெடிப்பு மூர்க்கத்தனமானது : பான் கீ மூன், ஒபாமா கண்டனம்
ADDED : ஜூலை 14, 2011 10:26 PM

நியூயார்க் : மும்பை குண்டுவெடிப்பிற்கு, ஐ.நா., பொதுச் செயலர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 21 பேர் பலியாகி, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அப்பாவி மக்கள் மீதான இந்த வன்முறை தாக்குதலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்திய அரசு மற்றும் அந்நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டில் நானும் பங்கேற்று, இத்தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உலகின் அமைதிக்கு தீவிரவாதம் மிரட்டலாக இருந்து வருகிறது' என, தெரிவித்துள்ளார்.
அதிபர் ஒபாமா: 'அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா உள்ளது. இந்த வன்முறைக்கு காரணமானவர்களை நீதிக்கு முன் நிறுத்த, இந்தியாவுக்கு நாங்கள் துணைபுரிவோம். இந்த மோசமான பயங்கரவாத தாக்குதலில் இருந்து இந்தியா தானாகவே மீண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கிறேன்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.இதேபோல், ரஷ்யா மற்றும் பிரான்சு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.


