/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் தரப்பில் ஐந்து பேர் மனுகரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் தரப்பில் ஐந்து பேர் மனு
கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் தரப்பில் ஐந்து பேர் மனு
கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் தரப்பில் ஐந்து பேர் மனு
கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் தரப்பில் ஐந்து பேர் மனு
ADDED : செப் 23, 2011 01:23 AM
கரூர்: கரூர் நகராட்சி தேர்தலில் போட்டியிட காங்., கட்சி சார்பில் ஐந்து பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட 300 க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுத்துள்ளனர்.
கடந்த 2004 முதல் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க., வுடன் காங்., கூட்டணி அமைத்த போட்டியிட்டது. சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து உள்ளாட்சி தேர்தலில் காங்., கட்சி தனித்து போட்டியிட்டு பலத்தை காட்ட வேண்டும் என முன்னாள் மத்தியமைச்சர் இளங்கோவன், மாநில இளைஞர் காங்., தலைவர் யுவராஜா போன்றவர்கள் வலியூறுத்தி வந்தனர். இந்த நிலையில் தி.மு.க., உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக, அதன் தலைவர் கருணாநிதி திடீரென அறிவித்தார். அதிர்ச்சியடைந்த காங்., கட்சி ஒரு வழியாக சுதாரித்து கொண்டு, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட காங்., கட்சி நிர்வாகிகள் கடந்த ஒரு வாரமாக மனு கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் போட்டியிட நிர்வாகிகள் முன்வராத நிலையில், கரூர் நகராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு மாவட்ட தலைவர் சுப்ரமணியம், முன்னாள் மாணவர் அணி செயலாளர் சக்திவேல், மாரப்பன், பாலகிருஷ்ணன், நீலமேகம் ஆகியோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அதில் மாவட்ட தலைவர் சுப்ரமணியம் அல்லது சக்திவேலுவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என காங்., கட்சி தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.