வேறுபாடுகள் 'புல்லட்'டில் அல்ல; பைடன்
வேறுபாடுகள் 'புல்லட்'டில் அல்ல; பைடன்
வேறுபாடுகள் 'புல்லட்'டில் அல்ல; பைடன்
ADDED : ஜூலை 15, 2024 08:58 AM

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தாக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டு கொண்டுள்ளார். அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:
இந்த துயரமான , பரபரப்பான நேரத்தில் இந்த சூடான அரசியல் சூழலில் உங்களிடம் பேச விரும்புகிறேன். தேர்தலில் நமக்கு யாரும் எதிரிகள் அல்ல, நமது சக ஊழியர்கள்தான். நண்பர்கள்தான், நாட்டிற்காக அனைவரும் ஒன்றுப்பட்டு நிற்க வேண்டும். எப்பிஐ நல்ல முறையில் விசாரித்து வருகின்றனர். நமது வேறுபாடுகளை களைந்து வன்முறைக்கு எதிராக போராட வேண்டும். வன்முறையை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.
இப்போது நாம் நிதானமாக செயல்பட வேண்டும். இது வரை நடந்த வன்முறை ஜெயித்ததாக வரலாறு இல்லை. நாம் ஓட்டுப்பெட்டியில் உள்ள வேறுபாடுகளை தீர்த்து கொள்வோம். ஆனால் புல்லட் என்பதில் நாம் வேறுபட முடியாது. நல்ல வேளை டிரம்ப் லேசான காயத்துடன் தப்பினார். இதற்கு இறைவனுக்கு நன்றி. அமெரிக்கர்கள் நம் நாட்டின் ஒற்றுமைக்கு ஒன்றிணைந்து செயல்படுவோம். ஒற்றுமையே நமக்கு இலக்கு. இவ்வாறு பைடன் கூறியுள்ளார்.
டிரம்ப்மீது தாக்குதல் நடந்த 24 மணி நேரத்தில் பைடன் 3 முறை இது தொடர்பாக பேசியுள்ளார்.