/உள்ளூர் செய்திகள்/சென்னை/மதுரவாயலில் வாலிபர் அடித்துக் கொலை : நண்பர்களிடம் போலீசார் விசாரணைமதுரவாயலில் வாலிபர் அடித்துக் கொலை : நண்பர்களிடம் போலீசார் விசாரணை
மதுரவாயலில் வாலிபர் அடித்துக் கொலை : நண்பர்களிடம் போலீசார் விசாரணை
மதுரவாயலில் வாலிபர் அடித்துக் கொலை : நண்பர்களிடம் போலீசார் விசாரணை
மதுரவாயலில் வாலிபர் அடித்துக் கொலை : நண்பர்களிடம் போலீசார் விசாரணை
ADDED : செப் 22, 2011 12:24 AM
மதுரவாயல் : தலையில் வெட்டுக் காயத்துடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்த வாலிபரின் உடலை மீட்ட போலீசார், கொலையாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியில், நேற்று காலை, தலையில் வெட்டுக் காயத்துடன், வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். மதுரவாயல் போலீசார் விசாரணையில், இறந்த வாலிபர், மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியில் வசிக்கும் மரகதம் மகன் குமார், 24, என்பதும், அவர் பெயின்டராக வேலை பார்த்ததும் தெரிந்தது. தலையில் கல்லால் தாக்கி கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. குமாரின் சட்டைப் பையில் இருந்த பாக்கெட் டைரியில், அவரது நண்பர்களின் தொலைபேசி எண்கள் இருந்துள்ளன. தற்போது, குமாரின் நண்பர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மது அருந்தும் பழக்கம் உடைய குமார், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.