இமானுவேல் சேகரன் நினைவு தினம் பாதுகாப்பு பணியில் 9 மாவட்ட போலீசார்
இமானுவேல் சேகரன் நினைவு தினம் பாதுகாப்பு பணியில் 9 மாவட்ட போலீசார்
இமானுவேல் சேகரன் நினைவு தினம் பாதுகாப்பு பணியில் 9 மாவட்ட போலீசார்
ADDED : செப் 01, 2011 02:06 AM
ராமநாதபுரம் : இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, ஒன்பது மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செப்.,11 ல், இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அஞ்சலி செலுத்த வரும் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகளுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. வாகனங்களில் வருபவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் வாகன எண், பயணம் செய்வோரின் விபரத்தை தெரிவித்து, அனுமதி உத்தரவை பெற்று, முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். ஆயுதங்கள் எடுத்து செல்லக்கூடாது, ஜாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்கள் எழுப்பவோ, மேற்கூரை பயணமோ கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரிந்த எஸ்.பி.,க்களையும் பாதுகாப்பு பணிக்காக அழைக்க உள்ளனர்.