Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 2026 தேர்தலில் தி.மு.க.,வை மக்கள் ஒதுக்கித் தள்ளுவார்கள்; விஜய் உறுதி

2026 தேர்தலில் தி.மு.க.,வை மக்கள் ஒதுக்கித் தள்ளுவார்கள்; விஜய் உறுதி

2026 தேர்தலில் தி.மு.க.,வை மக்கள் ஒதுக்கித் தள்ளுவார்கள்; விஜய் உறுதி

2026 தேர்தலில் தி.மு.க.,வை மக்கள் ஒதுக்கித் தள்ளுவார்கள்; விஜய் உறுதி

UPDATED : மார் 17, 2025 05:18 AMADDED : மார் 16, 2025 11:41 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'தி.மு.க.,வை 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள்' என நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள், நபர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. பின்னர், கணக்கில் வராத பணம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஊழல் இலக்கியம்

இந்த முறைகேடு பற்றி விளக்கும்போது, நன்கு திட்டமிடப்பட்ட கணக்கில் வராத பணம் ஈட்டுதல் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான பணம் பெறுதல், டிஸ்டில்லரீஸ் கம்பெனிகளுக்கும் பாட்டில் கம்பெனிகளுக்கும் இடையில் இருந்த மிகப் பெரிய கூட்டு இருந்துள்ளது. அமலாக்கத் துறை, டாஸ்மாக்கில் நடந்துள்ள கணக்கில் வராத பணமோசடி குறித்துப் பயன்படுத்தி உள்ள வார்த்தைகளைப் பார்த்தால், வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு இருக்கிறது.

மதுவிற்கு அடிமை

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதைப் பெருமையாகப் பறைசாற்றும் இதே அரசுதான் மக்கள் நலனைக் கெடுத்து, மதுவிற்கு அடிமையாக்கும் மது விற்பனையையும் செய்கிறது. அதே மதுவை வைத்துத் தான் முறைகேடும் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. எவ்வகையிலும் இதுபோன்ற முறைகேடுகளை ஏற்கவே இயலாது எனப் பொதுமக்களே கோபத்தில் கொந்தளிக்கத் தொடங்கி உள்ளனர்.

நியாயமான விசாரணை

ஊழலில், காட்டாற்றையே உருவாக்க வல்லவர்கள் என்பதே தி.மு.க.வின் ஆட்சி அதிகார வரலாறு. அமலாக்கத் துறை தற்போது கையில் அள்ளி இருப்பது ஆயிரம் கோடி ரூபாய் என்ற கையளவு நீரே. இன்னும் தீவிரமாக ஆழ்ந்து ஆராய்ந்தால், இந்த டாஸ்மாக் முறைகேட்டில் மட்டுமே சிறுமீன்கள் முதல் திமிங்கிலங்கள் வரை சிக்கும் என்றே தெரிகிறது. ஆகவே, இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முறையான, நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

ஊழல் வித்தைகள்

விசாரணை நியாயமாக நடக்குமா என்பது மேலே இருக்கும் மறைமுக முதலாளிகளுக்கும் இங்கிருக்கும் அவர்களின் உறவுக்காரர்களுக்கும் மட்டுமே வெளிச்சம். இந்த வேளையில், இன்னொன்றையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் மூலம் ஈட்டப்பட்ட பணம்தான் 200 தொகுதிகளை வெல்வோம் என்ற இறுமாப்புச் சூளுரையின் பின்னணியாக இருக்கும் போல.

ஆனால், எத்தனைக் கோடிகளைக் கொட்டினாலும், இனி இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது. இவர்களை 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us