ADDED : ஆக 05, 2011 09:57 PM
காரியாபட்டி: திறப்பு விழா நடத்தி, பயன்பாட்டிற்கு வராத பள்ளிக் கட்டடம்,
'தினமலர்' செய்தி எதிரொலியால் பயன்பாட்டிற்கு வந்தது.
காரியாபட்டி தோனுகால்
அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. போதிய
அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கியதால் மாணவர்கள் சிரமப்பட்டனர். இதை
தொடர்ந்து அடிப்படை வசதிகளுடன் 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டடம்
கட்டி முடிக்கப்பட்டது. இதற்கு ஆறு மாதத்திற்கு முன் அவசர அவசரமாக திறப்பு
விழா நடத்தப்பட்டது. ஆனால் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் ஆடு, மாடுகள்
மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. போதிய இடவசதி இல்லாமல்
மாணவர்கள் சிரமப்பட்டனர். இது தொடர்பான செய்தி 'தினமலர் ' இதழில் நேற்று
முன் தினம் வெளியானது. இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர் விஷ்னுபிரசாத் ,
பள்ளிக் கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். அதன்படி
புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வந்ததால் கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.