ADDED : ஆக 06, 2011 05:13 PM
கோவை: 10 ஆயிரம் பேரிடம் ரூ.
9.2 கோடி மோசடி செய்ததாக கோவையில் தம்பதி கைது செய்யப்பட்டனர். கோவையைச் சேர்ந்த பாப்னா (54) மற்றும் அவரது மனைவி இருவரும், 16 ஆண்டுகளுக்கு முன் ஸ்பின்னிங் மில் மற்றும் எக்ஸ்போர்ட் கம்பெனி துவங்குவதாக கூறி, 10 ஆயிரம் பேரிடம் ரூ. 9.2 கோடி வரை வசூலித்து ஏமாற்றி தலைமறைவாகினர். அவ்வப்போது அவர்கள் தாங்கள் தங்கும் இடத்தை அடிக்கடி மாற்றியதால் அவர்களை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், அவர்கள் இருவரையும் கைது செய்த கோவை போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மோசடி செய்த பணத்தில் மும்பை, ஆமதாபாத் மற்றும் சின்னியம்பாளையம் ஆகிய இடங்களில் இருவரும் நிலங்கள் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.