/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காளையார்கோவில் வீடுகளில் தொடர் கொள்ளை: 3 பேர் கைதுகாளையார்கோவில் வீடுகளில் தொடர் கொள்ளை: 3 பேர் கைது
காளையார்கோவில் வீடுகளில் தொடர் கொள்ளை: 3 பேர் கைது
காளையார்கோவில் வீடுகளில் தொடர் கொள்ளை: 3 பேர் கைது
காளையார்கோவில் வீடுகளில் தொடர் கொள்ளை: 3 பேர் கைது
ADDED : ஜூலை 24, 2011 09:28 PM
காளையார்கோவில் : காளையார்கோவில் உட்பட பல்வேறு வீடுகளில் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற,தேனி மாவட்டத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காளையார்கோவில் அருகே வலையம்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மாணிக்கம்(75), இவரது மனைவி வியாகுலம்(73). கடந்த மே 6ல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 2.40 மணிக்கு இவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல், ஆயுதங்களால் தாக்கி, ஆசிரியை கழுத்தில் இருந்த 15 பவுன் நகையை வழிப்பறி செய்தனர். இவர்களது புகார்படி, காளையார்கோவில் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு மறவமங்கலத்தில், ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் படியாக மூன்று பேர் நின்றனர். அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், தேனி மாவட்டம் சங்கல்பட்டியை சேர்ந்த முருகேசன்(35), காமாட்சிபுரத்தை சேர்ந்த தங்கராஜ்(22), மாணிக்கம்(35) என தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில், வலையப்பட்டியில் ஆசிரியர்களை தாக்கி கொள்ளையடித்ததாக தெரிவித்தனர். மேலும் இவர்கள் கடந்த 5ம் தேதி சாலைக்கிராமம் அருகே பாப்பன்மடையை சேர்ந்த அம்புரோஸ் என்பவரது வீட்டில் 3 பவுன்; பிப். 28ல் குமாரக்குறிச்சியை சேர்ந்த கார்த்திகை செல்வி வீட்டில் 5பவுன் நகையை கொள்ளையடித்ததாக தெரிவித்தனர். இந்த நகைகளை தேனி மாவட்டம் போடியை சேர்ந்த சுருளியம்மாளிடம் அடகு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். போலீசார் மூன்று பேரையும் கைது செய்து, 21 பவுன் நகை மீட்டனர்.