/உள்ளூர் செய்திகள்/மதுரை/மது பாட்டில் விலை உயர்வு : ஊழியர்களிடம் வசூலிப்புமது பாட்டில் விலை உயர்வு : ஊழியர்களிடம் வசூலிப்பு
மது பாட்டில் விலை உயர்வு : ஊழியர்களிடம் வசூலிப்பு
மது பாட்டில் விலை உயர்வு : ஊழியர்களிடம் வசூலிப்பு
மது பாட்டில் விலை உயர்வு : ஊழியர்களிடம் வசூலிப்பு
ADDED : ஜூலை 12, 2011 12:13 AM
மதுரை : மது பாட்டில் விலை உயர்வு நேற்று திடீரென உயர்த்தப்பட்டது.
கூடுதல் விலை உயர்வை ஊழியர்கள் செலுத்த வேண்டும் என, டாஸ்மாக் (தமிழ்நாடு வாணிப கழகம்) உத்தரவிட்டுள்ளது. குவார்ட்டருக்கு ஐந்து ரூபாய், ஆப் பாட்டிலுக்கு பத்து ரூபாய், புல் பாட்டிலுக்கு 20 ரூபாய், பீருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தியும், புதிய விலை உயர்வு நேற்று முதல் அமலாவதாக டாஸ்மாக் அறிவித்தது. புதிய விலை விவரம் நேற்று மதியம் 3 மணிக்கு தான் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், காலை 10 முதல் மதியம் 3 மணி வரை பழைய விலைக்கே மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. விற்பனைக்கு ஏற்ப புதிய விலையை செலுத்த வேண்டும் என, டாஸ்மாக் தெரிவித்தது.
இதுகுறித்து டாஸ்மாக் அனைத்து நிலை பணியாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் சரணவன் கூறுகையில், ''விலை உயர்வு குறித்து அறிவிப்பு இல்லை. மதியம் 3 மணிக்கு தான் தெரியும். பழைய விலைக்கு விற்கப்பட்ட பாட்டில்களுக்கும் புதிய விலையை செலுத்த வேண்டும் என, டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், ஊழியர்கள் தங்களது சொந்த பணத்தை இழக்க வேண்டியுள்ளது. கூடுதல் விலை உயர்வை அரசே ஏற்க வேண்டும்,'' என்றார்.டாஸ்மாக் தென்மண்டல மேலாளர் ராகவன் கூறும்போது, ''புதிய விலை உயர்வு இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டது. ஆகையால், புதிய விலை நேற்று காலை முதல் அமலாகியுள்ளது. இதற்கு, நிர்வாகம் பொறுப்பல்ல,'' என்றார்.