/உள்ளூர் செய்திகள்/மதுரை/குன்றத்து கோயிலில் கேசட் கடை அமைக்க எதிர்ப்புகுன்றத்து கோயிலில் கேசட் கடை அமைக்க எதிர்ப்பு
குன்றத்து கோயிலில் கேசட் கடை அமைக்க எதிர்ப்பு
குன்றத்து கோயிலில் கேசட் கடை அமைக்க எதிர்ப்பு
குன்றத்து கோயிலில் கேசட் கடை அமைக்க எதிர்ப்பு
ADDED : ஆக 22, 2011 02:31 AM
மதுரை, : திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் திருவாட்சி மண்டபத்தில்
பிரசாத ஸ்டால் அருகே ஆடியோ கேசட் கடை நடத்த கோயில் நிர்வாகம் முடிவு
செய்துள்ளது. இதற்கு இந்து ஆலயப் பாதுகாப்புக் குழு எதிர்ப்பு
தெரிவித்துள்ளது.குழுவின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரவடிவேல் கூறியதாவது
:கோயில்களில் கூட்டத்தை கட்டுப்
படுத்த தரிசன கட்டணம் வசூலிப்பதாக கூறும் நிர்வாகம், பக்தர்கள் இறைச்
சிந்தøனையோடு அமரும் இடங்களில் கடைகள் அமைப்பதை கண்டிக்கிறோம். காரணம்,
நாளடைவில் சினிமா கேசட்களையும் விற்க வாய்ப்புள்ளது.பத்து ஆண்டுகளுக்கு
முன், கோயில் நிர்வாகம் சார்பில் இதுபோன்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதை
தினமலர் இதழ் சுட்டிக்காட்டியதால் தடுக்கப்பட்டது. தற்போது கோயில்
நிர்வாகம் மேற்கொண்டுள்ள இம்முயற்சியை கைவிடாவிட்டால், போராட்டம்
நடத்தப்படும், என்றார்