/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தீயணைப்பு நிலையம் இல்லாத திருப்புவனம்தீயணைப்பு நிலையம் இல்லாத திருப்புவனம்
தீயணைப்பு நிலையம் இல்லாத திருப்புவனம்
தீயணைப்பு நிலையம் இல்லாத திருப்புவனம்
தீயணைப்பு நிலையம் இல்லாத திருப்புவனம்
ADDED : ஆக 04, 2011 11:44 PM
திருப்புவனம்:திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையம் இல்லாததால் விபத்துக்கள்
நடக்கும் போது இழப்புகள் அதிக அளவில் ஏற்படுகிறது.திருப்புவனம்
ஒன்றியத்தில் 45 ஊராட்சிகள், 120 கிராமங்கள் உள்ளன.பேரூராட்சியில்
குடியிருப்புகள் அதிகரித்து வருவதால் எல்லையும் விரிவடைந்து
வருகிறது.பூவந்தி, கொந்தகை,பழையனூரில் ஆரம்ப சுகாதார
நிலையம்,திருப்புவனத்தில் அரசு சமுதாய நல மையம் உள்ளது. மதுரை - ராமேஸ்வரம்
மெயின்ரோட்டில் மணலூரில் சிறு,குறு மற்றும் தொழிற்கூடங்கள்,
பொட்டப்பாளையம், பசியாபுரம், பூவந்தி பகுதியில் கிரானைட் தொழிற்சாலைகள்
உள்ளன.
இந்த பகுதியில் எதிர்பாராத விதமாக தீ விபத்துக்களோ, விபத்துக்களோ
நேர்ந்தால் 30 கி.மீ., தூரத்தில் உள்ள மானாமதுரையிலிருந்து தீயணைப்பு
வாகனம் வருவதற்குள் கடுமையான சேதம் ஏற்பட்டு விடுகிறது.திருப்புவனத்தில்
தீயணைப்பு நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டாக நீடிக்கிறது. பூவந்தி
புதிய போலீஸ் ஸ்டேஷன் அருகில் இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது.
இப்பகுதியில் தாமதமின்றி தீயணைப்பு நிலையம் அமைக்க மாவட்டநிர்வாகம்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.