ADDED : ஆக 04, 2011 11:43 PM

சென்னை: தமிழக பட்ஜெட்டில், பல தரப்பினரும் பயன் பெறும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக, மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
ம.ம.க., மாநிலத் தலைவர், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிட்ட அறிக்கை: சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரும் பயன் பெறும் வகையில் அமைந்துள்ள, தமிழக பட்ஜெட்டை ம.ம.க., வரவேற்கிறது. வக்பு வாரியத்திற்கு ஆண்டுதோறும் வழங்கிய மானியம், 45 லட்சம் ரூபாயிலிருந்து, 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. உலமா ஓய்வூதியம், 750 ரூபாயிலிருந்து 1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வக்பு வாரிய ஓய்வூதியதாரர்களின் நிலுவையிலுள்ள ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைகளுக்கு ஒரு முறை மானியமாக, 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வக்பு வாரிய ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்டு, நிர்வாகத்தை சீரமைக்க முடிவு செய்துள்ளதற்கு நன்றி. அதே நேரம், தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான முஸ்லிம்களுக்கு, இட ஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்தி தர, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.