பக்தர்கள் ஓய்வுக்கூடம்முதல்வர் திறந்து வைத்தார்
பக்தர்கள் ஓய்வுக்கூடம்முதல்வர் திறந்து வைத்தார்
பக்தர்கள் ஓய்வுக்கூடம்முதல்வர் திறந்து வைத்தார்
ADDED : அக் 04, 2011 12:18 AM
சென்னை:பழனி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரை வரும் பக்தர்கள் வசதிக்காக, திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஓய்வுக்கூடம் மற்றும் உடுமலைப்பேட்டையில் கட்டப்பட்ட தீயணைப்பு பணியாளர்களுக்கான குடியிருப்பு ஆகியவற்றை, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம், முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
தமிழக அரசு கூறியிருப்பதாவது:மடத்துக்குளம் தாலுகா, கொமரலிங்கம் கிராமத்தில், 2,925 சதுர அடி பரப்பளவுள்ள காலியிடத்தில், 1,014 சதுர அடி பரப்பளவில் நான்கு குளியல் அறை மற்றும் நான்கு கழிப்பறை வசதிகளுடன், கோவில் நிதி மூலம் 10 லட்சம் ரூபாய் செலவில் ஓய்வுக்கூடம் கட்டப்பட்டிருந்தது. இதை, முதல்வர் திறந்து வைத்தார்.கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர் மலையாண்டி பட்டினம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக வரும்போது, இந்த ஓய்வுக்கூடம் பயனுள்ளதாக இருக்கும்.உடுமலைப்பேட்டையில், ஒரு கோடியே 11 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு பணியாளர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளையும், முதல்வர் திறந்து வைத்தார்.


