பாலஸ்தீன பிரச்னைக்கு அரேபிய நாடுகள் உதவி: அப்பாஸ் கோரிக்கை
பாலஸ்தீன பிரச்னைக்கு அரேபிய நாடுகள் உதவி: அப்பாஸ் கோரிக்கை
பாலஸ்தீன பிரச்னைக்கு அரேபிய நாடுகள் உதவி: அப்பாஸ் கோரிக்கை
ADDED : ஜூலை 28, 2011 07:10 AM
ஜெருசலேம்: அரேபிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் தான் பாலஸ்தீன தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பாலஸ்தீன அதிகாரப்பூர்வ அதிபர் முகமது அப்பாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னை பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் ,சர்ச்சைக்குரிய பாலஸ்தீன பகுதிகளை கடந்த 1967-ம் ஆண்டு முதல் ஆக்கிரமித்து வருகிறது. இப்பகுதியில் உள்ள ரமல்லாஹ், மேற்குகரைப்பகுதியான காஸா உள்ளிட்டவைகளை அடக்கிய பாலஸ்தீன பகுதிகளை தனி நாடாக கோரிக்கை வலுத்துவருகிறது. அமெரிக்க உள்ளிட்ட வல்லரசு நாடுகளும் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ, பாலஸ்தீன சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இஸ்ரேலில்,பாலஸ்தீன எல்லைப்பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் பெரும் இட நெருக்கடி ஏற்படுவதை இதனை கண்டித்தும், பாலஸ்தீன பிரச்னைக்கு முடிவு காண கோரியும், இளம் இஸ்ரேலியர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அமைதி வழியில் நேற்று அறப்போராட்டம் நடத்தினர். முன்னதாக இப்பிரச்னைக்கு அமெரிக்காவின் அதிபர் ஒபாமா அரசு ,தகுந்த நடவடிக்கை எடுக்காமல் கைவிரித்துவிட்டது. பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. இற்கிடையே பாலஸ்தீனம் தனி நாடு தொடர்பான பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஐ.நா.வின் பொதுச்சபையில் வரும் செப்டம்பர் மாதம் விவாதம் நடக்கிறது.இது குறித்து பாலஸ்தீனத்தின் அதிகாரப்பூர்வ அதிபர் முகமது அப்பாஸ் கூறுகையில், அரேபிய நாடுகளின் தலைவர்கள் பாலஸ்தீன பிரச்சனைக்கு ஆதரவு தர வேண்டும் என்றார்.