Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஒன்றியத்தில் 89 ஓட்டுச்சாவடி; 570 ஓட்டுப்பெட்டி

ஒன்றியத்தில் 89 ஓட்டுச்சாவடி; 570 ஓட்டுப்பெட்டி

ஒன்றியத்தில் 89 ஓட்டுச்சாவடி; 570 ஓட்டுப்பெட்டி

ஒன்றியத்தில் 89 ஓட்டுச்சாவடி; 570 ஓட்டுப்பெட்டி

ADDED : ஆக 23, 2011 11:23 PM


Google News
திருப்பூர் : திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 ஊராட்சிகளில், 89 ஓட்டுச்சாவடிகள் அமைகின்றன. உள்ளாட்சி தேர்தலுக்காக, 570 ஓட்டுப்பெட்டிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளில், எட்டு ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைகின்றன. மீதியுள்ள 13 ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, புகைப்படத்துடன் கூடிய பட்டியல் தயார்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளில், 23 ஆயிரத்து 576 ஆண்கள்; 22 ஆயிரத்து 435 பெண்கள் என 46 ஆயிரத்து 11 வாக்காளர்கள் உள்ளனர்.உள்ளாட்சி தேர்தலுக்காக, 13 ஊராட்சிகளில் 89 ஓட்டுச்சாவடிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. பட்டம்பாளையம், சொக்கனூர், தொரவலூர் ஊராட்சிகளில் தலா மூன்று ஓட்டுச்சாவடி; மேற்குபதி, வள்ளிபுரம், காளிபாளையம், பொங்குபாளையம் ஊராட்சிகளில் தலா ஐந்து ஒட்டுச்சாவடி.

பெருமாநல்லூரில் ஏழு ஓட்டுச்சாவடி; இடுவாய் ஊராட்சியில் எட்டு ஓட்டுச்சாவடி; ஈட்டிவீரம் பாளையம், கணக்கம்பாளையம் ஊராட்சிகளில் தலா ஒன்பது ஓட்டுச்சாவடி; முதலிபாளையத்தில் 12; மங்கலம் ஊராட்சியில் 15 என 89 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது; அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மின்சார வசதி, கழிப்பிடம், சாய்வுதளம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகின்றன.ஓட்டுப்பெட்டிகள் பழுதுபார்க்கப்பட்டு, பெயின்ட் அடித்து தயார் நிலையில் உள்ளன. ஒன்றியத்தில் மொத்தம் 650க்கும் அதிகமான ஓட்டுப்பெட்டிகள் இருந்தன. அவற்றில், தற்போது எட்டு ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைவதால், 100 பெட்டிகளின் பயன்பாடு குறைகிறது. 'ரிசர்வ்' வைப்பதற்கும் சேர்த்து, மொத்தம், 570 ஓட்டுப்பெட்டிகள் தற்போது தயார் நிலையில் உள்ளன. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ) பால்ராஜ் கூறுகையில், ''ஓட்டுப்பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. அடுத்ததாக, ஓட்டுச்சாவடிகள் அமையும் பள்ளிகளில், அடிப்படை வசதிகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. ஊராட்சிகளில் வாக்களிக்கும் மக்கள், ஊராட்சி தலைவர், உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என நான்கு ஓட்டுக்களை பதிவு செய்வர். ஒவ்வொன்றும் வெவ்வேறு கலர்களில் அச்சிடப்படும் என்பதால், ஓட்டை வாக்காளர்கள் பதிவு செய்து, ஒரே பெட்டியில் போடுவர். ஓட்டு எண்ணிக்கையின்போது, தனித்தனியாக பிரித்துஎண்ணப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us