Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/முந்தியது அ.தி.மு.க; தொடர்கிறது தி.மு.க.,

முந்தியது அ.தி.மு.க; தொடர்கிறது தி.மு.க.,

முந்தியது அ.தி.மு.க; தொடர்கிறது தி.மு.க.,

முந்தியது அ.தி.மு.க; தொடர்கிறது தி.மு.க.,

ADDED : அக் 02, 2011 09:09 PM


Google News

கோவை : கோவை மேயர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க.,வேட்பாளர் நேற்று முன்தினம் பிரசாரத்தை துவக்கி, தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளார்.

தி.மு.க.,வேட்பாளர் இன்று பிரசாரத்தை துவக்குகிறார்.

மேயர் தேர்தல் களத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, தி.மு.க.,சார்பில் துணை மேயர் கார்த்திக், காங்.,சார்பில் சின்னையன் மற்றும் பா.ஜ., மா.கம்யூ.,வேட்பாளர்கள் உள்ளனர். இன்று, இறுதி பட்டியல் வெளியானதும் வார்டு வார்டாக பிரசாரம் மேற்கொள்ள கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில், வேட்பாளர் பெயர் அறிவிப்பில் முந்திக் கொண்டது போல், பிரசாரத்திலும் அ.தி.மு.க.,வேட்பாளர் வேலுச்சாமி முந்திக் கொண்டார். நேற்று முன்தினம் தனது பிரசாரத்தை துவக்கிய வேலுசாமி, நேற்று காலை டவுன்ஹால், ராம்நகர், பாப்பநாயக்கன்பாளையம், தனலட்சுமி நகர், அம்மன்குளம் பகுதியில் ஓட்டு கேட்டார். அ.தி.மு.க.,வேட்பாளருடன் பிரசாரத்தில் எம்.எல்.ஏ.,க் கள் சின்னசாமி, மலரவன், முன்னாள் எம். எல்.ஏ.,க்கள் ராஜூ, செல்வராஜ் மற்றும் ஏராளமான தொண்டர்கள் சென்றனர்.

தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தனது பிரசாரத்தை இன்று குறிச்சியில் துவக்குகிறார். பிரசாரத்தில் மாவட்ட மாநகர செயலாளர் வீரகோபால், மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராமநாதன், கண்ணப்பன் பங்கேற்கின்றனர். காங்.,பா.ஜ.,வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருவதால், பிரசாரத்தை இன்னும் துவக்கவில்லை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us