சி.பி.ஐ., ரெய்டு: இன்று காலையில் நடந்தது என்ன?
சி.பி.ஐ., ரெய்டு: இன்று காலையில் நடந்தது என்ன?
சி.பி.ஐ., ரெய்டு: இன்று காலையில் நடந்தது என்ன?
UPDATED : அக் 10, 2011 05:09 PM
ADDED : அக் 10, 2011 12:44 PM
சென்னை: தயாநிதி வீட்டில் ரெய்டு நடத்துவதற்காக சி.பி.ஐ., அதிகாரிகள் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு காலை 7.00 மணிக்கு அதிகாரிகள் வந்தனர்.
கதவை திறக்குமாறு வாசலில் நின்ற காவல்காரரிடம் கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். வீட்டில் உள்ளே இருக்கும் நபர்களிடம் வாட்ச்மேன் இந்த தகவலை சொல்லியிருக்கிறார். ஆனால் எவ்வித பதிலும் இல்லை. அரை மணி நேரமாக காத்திருந்த அதிகாரிகள் சீக்கிரம் கதவை திறய்யா இல்லைன்னா உன்னை கைது செய்ய வேண்டியது இருக்கும் என்று மிரட்டிய பின்னர் கதவு திறந்து விடப்பட்டது. 7. 35 க்கு சி.பி.ஐ., அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். தொடர்ந்து ரெய்டு நடத்தப்பட்டதுது. காலை 10 .30 மணியளவில் மு.க., தமிழரசு, தயாநிதி வீட்டிற்கு வந்தார். அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார்.


