/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தேர்தல் மேற்பார்வையாளர் விழுப்புரத்தில் ஆலோசனைதேர்தல் மேற்பார்வையாளர் விழுப்புரத்தில் ஆலோசனை
தேர்தல் மேற்பார்வையாளர் விழுப்புரத்தில் ஆலோசனை
தேர்தல் மேற்பார்வையாளர் விழுப்புரத்தில் ஆலோசனை
தேர்தல் மேற்பார்வையாளர் விழுப்புரத்தில் ஆலோசனை
ADDED : அக் 01, 2011 12:27 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் தேர்தல் மேற்பார்வையாளர் ஆலோசனை நடத்தினார்.விழுப்புரம் மாவட்டத்தின் உள்ளாட்சி தேர்தல் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஆணையர் மாலிக்பெரோஸ்கான் நேற்று விழுப்புரம் வந்தார்.கலெக்டர் மணிமேகலை முன்னிலையில் ஆலோசனை நடத்திய அவர், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் விபரம், தேர்தல் அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமனம், ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி விபரம், ஓட்டுச்சாவடி மையங்களின் விவரம், ஓட்டளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள், ஓட்டு எண்ணும் மையங்களின் விபரங்கள் குறித்து தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
திட்ட இயக்குனர் முத்துமீனாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள் ளாட்சி தேர்தல்கள்) வடிவேல், சப் கலெக்டர் (பயிற்சி) சுபோத்குமார் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.