ADDED : செப் 26, 2011 10:28 PM
தேனி: மாவட்டத்தில் நான்காவது நாளான நேற்று 953 பேர் மனு தாக்கல் செய்தனர்.
உள்ளாட்சி தேர்தலுக்கான மனுதாக்கல் தொடங்கிய நான்காவது நாளான நேற்று மாவட்ட பஞ்., கவுன்சிலர் பதவிக்கு ஒருவர், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 19 பேர், ஊராட்சி தலைவருக்கு 114 பேர், ஊராட்சி வார்டு மெம்பருக்கு 677 பேர், நகராட்சி தலைவருக்கு 12 பேர், நகராட்சி கவுன்சிலருக்கு 35 பேர், பேரூராட்சி தலைவர் பதவிக்கு 10 பேர், வார்டு உறுப்பினர் பதவிக்கு 85 பேர் உட்பட 953 பேர் மனு தாக்கல் செய்தனர். இது வரை 1,554 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.