தண்டவாள பாயின்ட்டுகள்இணைக்கும் பணி துவக்கம்
தண்டவாள பாயின்ட்டுகள்இணைக்கும் பணி துவக்கம்
தண்டவாள பாயின்ட்டுகள்இணைக்கும் பணி துவக்கம்
ADDED : செப் 25, 2011 06:14 AM
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில், இரண்டாம் அகல பாதையில் தண்டவாள ஷன்டிங் பாயின்ட்டுகள் இணைக்கும் பணி நேற்று துவங்கியது.செங்கல்பட்டிலிருந்து, விழுப்புரம் வரையுள்ள 105 கி.மீ., தூரத்திற்கு, இரட்டை அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
விழுப்புரத்திலிருந்து முண்டியம்பாக்கம் வரை, 7 கி.மீ., தூரத்திற்கு பணிகள் முடிந்து, ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் முடிந்தது.விக்கிரவாண்டி நிலையப் பகுதிகளில், புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணி முடிந்து சிக்னல், எலக்ட்டிரிக்கல், ஷன்டிங் பாயின்ட் இணைப்பு, லெவல் கிராசிங், ஜல்லி பேக்கிங் செய்யும் பணிகள் துவங்கியது. நேற்று காலை 7.25 மணிக்கு, பழைய பாதையில் ரயில்கள் வருவது நிறுத்தப்பட்டது. விழுப்புரம் - சென்னை பழைய பாதையில், 151/2ஏ மின்கம்பம் அருகில், புதிய பாதை ஷன்டிங் பாயின்ட்டுகள் இணைக்கும் பணியும், ஜல்லி பேக்கிங் செய்யும் பணியும் நடந்தது.
மேலக்கொந்தை ரயில்வே கேட் அருகே லெவல் கிராசிங் அமைத்தலும், பாயின்ட்டுகள் இணைக்கும் பணியும் நடந்தது. இன்று, புதிய பாதையில் விக்கிரவாண்டி ஸ்டேஷன் வரை ரயிலை இயக்கி, பாயின்ட்டுகள் இணைக்கும் பணி நடக்கிறது.இதற்கான பணிகளில், ரயில்வே உதவி முதன்மை பொறியாளர் செலபதி மேற்பார்வையில், செயற்பொறியாளர் சாம்சன் விஜயகுமார் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.