Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/துபாயில் இருந்து கடத்தி வந்தது யார்; ஸ்ரீபெரும்புதூரில் ரூ.18 கோடி வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்!

துபாயில் இருந்து கடத்தி வந்தது யார்; ஸ்ரீபெரும்புதூரில் ரூ.18 கோடி வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்!

துபாயில் இருந்து கடத்தி வந்தது யார்; ஸ்ரீபெரும்புதூரில் ரூ.18 கோடி வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்!

துபாயில் இருந்து கடத்தி வந்தது யார்; ஸ்ரீபெரும்புதூரில் ரூ.18 கோடி வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்!

ADDED : ஜூன் 24, 2025 07:41 PM


Google News
Latest Tamil News
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 18.2 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

துபாயில் இருந்து கடல் வழியாக குளியலறையில் பொருத்தப்படும் பொருட்களில் வெளிநாட்டு சிகரெட் கடத்தி வரப்பட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் சென்னை மண்டல அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, அதிகாரிகள் நடத்திய சோதனையில் 92.1 லட்சம் ( எண்ணிக்கையில்) வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.18.2 கோடி (தோராயமாக) ஆகும். இந்த சிகரெட் பெட்டிகளில் 2003ம் ஆண்டு சட்டப்படி, உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்படவில்லை.

கடந்த ஓராண்டில் மட்டும், சென்னை துறைமுகம் வழியாக கடத்தி வரப்பட்ட 4.4 கோடி வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.79.67 கோடியாகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us